அக்னி நட்சத்திரத்திற்கு இன்றோடு குட்பை: ஆனாலும்... மிரள வைக்கும் வானிலை அறிக்கை!


வெயில்

இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கி அடுத்த சில நாட்களிலேயே மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

கனமழை

இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட ரெமல் புயல் கரையைக் கடந்ததும் வெப்ப நிலையின் அளவு தமிழ்நாட்டில் கூடியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது.

அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனாலும், வெயிலின் அளவு தமிழகத்தில் படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை

அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இயல்பையொட்டியே இருக்கக்கூடும். இன்று முதல் மே 31-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது.

மழை

இந்த நிலையில்,தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு, மேற்கு திசைக்காற்று நிலவுகிறது. இதனால் இன்று முதல் ஜூன் 2-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

x