உடனடியாக இதைச் செய்யுங்க... 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!


கனமழை

தமிழ்நாட்டில் மே19-ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்பதால், அவசரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வறு மாவட்டங்களில் இன்று முதல் மே 19-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 26 மாவட்ட ஆட்சியர்ககளுக்கு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சார்பில் அவசர கடிதம் என்பது எழுதப்பட்டுள்ளது. அதில், கனமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை

அதன்படி இன்று முதல் மே 19- ம் தேதி தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையைச் சமாளிக்க மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளையும் இணைத்து மழையில் மக்கள் பாதிக்காத வகையில் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை துறை தயாராக உள்ளது. ஆனாலும், மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கனமழை பாதிப்பு தொடர்பாக அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். கனமழை எச்சரிக்கையால் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு நடவடிக்கையின் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை

இந்த அவசரக் கடிதம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர். கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதப்பட்டுள்ளது.

x