தமிழகத்தில் வெயில் தாக்கம் குறைந்ததால், கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்தாண்டு தமிழகத்தில் வழக்கத்தை விட கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், வெப்ப அலை வீசும் என்று அடிக்கடி வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் வருகிறது. முக்கியமாக, வெயில் உக்கிரமாக இருக்கும் காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரையில் திறந்தவெளியில் பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்கள் உட்பட பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஹீட் ஸ்டோராக்கால் உயிரிழப்பும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் வெயிலின் தாக்கம் காரணமாக வெப்பத்திற்காக அமைக்கப்பட்ட தனி வார்டுகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடும் வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல் நிலையை கருதி, வேலையை மதிய நேரத்திற்கு பதிலாக இரவு நேரங்களில் பார்க்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் 4 மணி வரை எந்த வகையான திறந்த வெளி கட்டுமானப்பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மே மாதம் இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் குறைந்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால், வெயில் தாக்கம் குறைந்து வருகிறது. அதனால், கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று கட்டுமான நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் 4 மணி வரை எந்த வகையான திறந்த வெளி கட்டுமானப்பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அளித்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!
கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!
தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!
அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!
கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!