சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்தும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
சென்னை மாநகர பகுதியில் பயணம் மேற்கொள்வோர்கள் சில நேரங்களில் மூன்று விதமான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணமாகச் செங்கல்பட்டிலிருந்து திருவல்லிக்கேணி பகுதிக்கு ஒருவர் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் புறநகர் ரயில், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து என மூன்றுவிதமான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
விரைவாகச் சென்றடையும் நோக்கில் பேருந்து, ரயில் என மாறிமாறி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. புறநகர் ரயிலிலும், மெட்ரோ ரயிலிலும் பயணம் மேற்கொள்வோர்கள் டிக்கெட் எடுப்பதற்காக சில நிமிடங்களைச் செலவிட நேரிடுகிறது.
இதனால் குறிப்பிட்ட ரயிலைத் தவற விடும் சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக மூன்று விதமான பயணங்களுக்கும் ஒரே பயணச் சீட்டு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னையில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது.
இந்த நிலையில் ஜூன் இரண்டாம் வாரம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்று போக்குவரத்திலும் பயணிக்க வசதியாக பிரத்யேக கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார்டில் ரீசார்ஜ் செய்து மக்கள் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!
கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!
தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!
அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!
கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!