திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சரத்குமார் குறித்து பேசிய பேச்சுக்கு நடிகை ராதிகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. எதிர்கட்சித் தலைவர்களையும், அக்கட்சி பெண் தலைவர்களையும் கடுமையாக தாக்கிப் பேசக்கூடியவர். இவருடைய பேச்சுகள் காணொலி வாயிலாக திமுகவினரால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ஆபாசமாக பேசினார் என்பதற்காக கடந்த ஆண்டு கட்சியில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து அவர் திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
நடிகை குஷ்பு, தமிழ்நாடு ஆளுநர் ரவி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சைக்குள்ளான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நடிகர் சரத்குமார் குறித்து அவர் பேசிய பேச்சு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்ட மேடையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இரவு 2 மணிக்கு மோடி அழைத்தார் என்று என்று சரத்குமார், நடிகை ராதிகாவுடம் கூறியதாக பேசினார். இதற்கு நடிகை ராதிகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோவையும் அதில் இணைத்துள்ளார்.
அந்த பதிவில், " அதில், ஏன்டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படணும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அந்த பதிவில் டேக் செய்துள்ளார்.