வரும் திங்கள் கிழமை ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல் உட்பட 96 மக்களவைத் தொகுதிகளுக்கு 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
மக்களவைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப். 19-ம் தேதி தொடங்கி, ஏப். 26ம் தேதி மற்றும் மே 7-ம் தேதி என இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவுபெற்றுள்ளது. இந்த சூழலில் வரும் திங்கள் கிழமை (மே 13ம் தேதி) நான்காம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த 4ம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்குவங்கம் (8) ஜம்மு-காஷ்மீர் (1) என மொத்தம் 93 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே நாளில், ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த 4ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!
மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!
இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!
ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!
லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!