[X] Close

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை!- அமைச்சர் உறுதி


minister-warns-private-operators

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Oct, 2018 15:57 pm
  • அ+ அ-

தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 20000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று சென்னையில் தொடங்கி  வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "தொடர்ந்து 5-வது ஆண்டாக 5 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்குகிறோம். இந்த ஆண்டு கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர் என ஐந்து இடங்களில் இருந்து இயக்குகிறோம்.

இதனால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. பேருந்துகள் சீராக இயங்கும். சுங்கச்சாவடிகளில் தனி லைன் ஒதுக்கித் தந்துள்ளோம். போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு 24 மணி நேரம் பணி நியமிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு சிக்கல் ஏற்படாதவாறு எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன

அதிக கட்டணம் வசூலித்ததாக 36 பேருந்துகள் பிடிக்கப்பட்டு ஒன்றரை மாதம் எங்கள் காவலில் இருந்தது. இந்த ஆண்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று துவங்கி நவம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close