போராட்டம் எதிரொலி! 1 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்!


எண்ணும் எழுத்தும் பயிற்சி

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சமீபகாலமாக தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. பழைய ஒய்வூதியத் திட்டம், ஊதிய சமநிலை, பணப்பலன்கள், எமிஸ் பணிகளை குறைத்தல் உள்ளிட்டவை அவர்களின் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன. அந்தவகையில் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் தலைமை அலுவலகமான டிபிஐ வளாகமே தற்போது போராட்டக் களமாக மாறியுள்ளது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஒருபுறம் சம வேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்ந்து 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமுற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடங்க இருக்கிறது. இந்த பயிற்சியை புறக்கணிக்க ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். பயிற்சியை ஆசிரியர்கள் புறக்கணிக்க உள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

புரட்டாசியில் பெருமாளையும், தாயாரையும் இப்படி வழிபட்டால் தரித்திரம் விலகும்!

சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி ஆவேசம்!

x