’ஓபிஎஸ் சேர்ந்தாலும் நாங்க சேர மாட்டோம்’ -எடப்பாடி உடனான கூட்டு குறித்து டிடிவி தினகரன் கருத்து..!


டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு

’’மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் ஓபிஎஸ் இணைந்தாலும் நாங்கள் இணையமாட்டோம்’’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஓபிஎஸ் - தினகரன்

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம் என ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேசி வரும் நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அரசியல் வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் சொல்வோம். ஓபிஎஸ் எனது பழைய நண்பர். அவர் ஏதோ கோபத்தில் செய்தது. எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் நண்பர் என்ற முறையில் மீண்டும் இணைவது என்பது நாட்டில் எங்கும் நடப்பது தான்.

ஓபிஎஸ் தனித்து முடிவு எடுப்பார். நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என மட்டும் தான் கூறியுள்ளோம். அவருடைய செயல்பாடுகளில் எதுவும் சொல்ல இயலாது. அமமுக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி செல்லக்கூடாது என 90 சதவீத அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகின்றனர். ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியுடன் உடன் கூட்டணி சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம் தனியாகவே போட்டியிடுவோம்" எனத் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் மீண்டும் விவாதத்தைக் கூட்டியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

x