[X] Close

உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு திமுகவே காரணம்!- அன்வர் ராஜா


anwar-raja

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Oct, 2018 16:28 pm
  • அ+ அ-

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததற்கு நாங்கள் அல்ல திமுகவே காரணம் எனக் கூறியுள்ளார் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா.

முன்னதாக நேற்று, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக எம்.பி.யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "உள்ளாட்சி தேர்தல் நடத்தபடாமல் தள்ளிவைத்த சம்பவத்துக்கு திமுக தொடர்ந்த வழக்கு தான் காரணம்" எனக் கூறினார்.

2 ஆண்டுகள் ஆகியும் நடக்காத தேர்தல்!

கடந்த 2016-ம் ஆண்டே நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 2 வருடங்களாக நடத்தப்படாமலேயே உள்ளது.  வார்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அரசு தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. வார்டு மறுசீரமைப்பை 2018 ஜனவரி மாதத்திற்குள் முடித்து தேர்தல் அறிவிப்பு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

ஆனால் 6 மாதங்களுக்கு மேல் கடந்தும் தேர்தல் அறிவிப்பு செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் மீண்டும் வார்டு மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்ற அதே காரணத்தைக் கூறியது. இதனால், உச்ச நீதிமன்றம் கண்டிப்பை தெரிவித்ததோடு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டது.

இந்நிலையில்தான் அன்வர் ராஜா, உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு திமுகவின் வழக்கே காரணம் என குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close