[X] Close

நிகழ்ச்சிக்கு ஆள் வராததால் மேடை ஏற மறுத்த அமைச்சர்!- வைரலாகும் வீடியோ


irked-by-low-turnout-minister-pon-radhakrishnan-refuses-to-take-dais

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Oct, 2018 13:43 pm
  • அ+ அ-

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நல வாழ்வு மைய துவக்க விழாவில் குறைவான எண்ணிக்கையிலேயே ஆட்கள் வந்திருந்ததால் மேடை ஏற மறுத்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனன்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நிகழ்ச்சிக்கு வந்த அவர் குறைந்த அளவில் கூட்டம் இருப்பதைப் பார்த்து, "இந்த ஊரில் உள்ளவர்கள் இங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள். உங்களைப் போன்ற அரசாங்க அதிகாரிகளை வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்தத்தான் நான் இங்கே வந்தேனா?" என கோபமாக வினவும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

அதற்கு சில அதிகாரிகள் நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்யவில்லை எனக் கூறுவது பதிவாகியுள்ளது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து ஊரில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். 50 பேர் திரட்டப்பட்ட நிலையில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close