[X] Close

உண்மையாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்!- தம்பிதுரை சூசகம்


thambidurai-interview

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Oct, 2018 13:32 pm
  • அ+ அ-

தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்ட18 எம்.எல்.ஏக்களை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு கட்சிக்காக உண்மையாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் யார் வந்தாலும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரையிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு  கட்சிக்காக உண்மையாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் யார் வந்தாலும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பொதுவாக பதில் கூறினார்.

மீண்டும் 18 எம்.எல்.ஏ.,க்களை குறிப்பிட்டு கேள்வி எழுப்பவே, "அதை முடிவு செய்ய கட்சி தலைமையிடம் இருக்கிறது" என்றார்.
18 தொகுதிகளுக்கும் ஏற்கெனவே காலியாக இருக்கும் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் நடைபெறும் என்ற கேள்விக்கு அதை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும்.

ஆனால், எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது எனக் கூறினார். மேலும், 19 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிதான் அதுமட்டுமல்லாமல் திருவாரூரிலும் கலைஞருக்குப் பின் மக்கள் அதிமுகவைத் தான் நம்புகின்றனர் எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close