[X] Close

அதிமுக பிரமுகர் தற்கொலை முயற்சி


admk-man-suicide-attempt

புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று தற்கொலைக்கு முயன்ற அதிமுக பிரமுகரை தடுக்கும் காவலர்.

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 12:40 pm
  • அ+ அ-

புதுக்கோட்டை

பட்டா வழங்க மறுப்பதாகக் கூறி, கோட்டாட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுக பிரமுகர் ஒருவர் நேற்று தற்கொலைக்கு முயன்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்துவிடுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற ஆசைத்தம்பி. அதிமுக பிரமுகரான இவர், புதுக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கியுள்ளார்.

பின்னர், அந்த நிலத்துக்கு பட்டா கேட்டு வருவாய்த் துறை அலுவலகத்தில் ஆசைத்தம்பி விண்ணப்பித்துள்ளார். கோட்டாட்சியர் டெய்சிகுமார் உத்தரவிட்டால்தான் பட்டா வழங்கப்படும் என வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான உத்தரவு வழங்கப்படாமல் கடந்த 3 மாதங்களாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர், சம்பந்தப்பட்ட நிலம் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் சம்பந்தப்பட்ட நபர் ஆஜராகாததால் பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கோட்டாட்சியர் அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த ஆசைத்தம்பி, நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். கோட்டாட்சியரைக் கண்டித்து கோஷமிட்டபடி பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதையறிந்த புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தினர், அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close