[X] Close

யானைகளால் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குமா வனத்துறை?


remedy-for-damage-of-elephants

சின்னதடாகத்தில் உள்ள ஒரு வாழை தோட்டத்தில் யானைகளால் சேதமடைந்த வாழை மரங்கள்.

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 12:32 pm
  • அ+ அ-

க.சக்திவேல்

கோவை

யானைகளால் சேதமாகும் பயிர்களுக்கு வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீடு உரிய காலத்தில் கிடைப்பதில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மலையை ஒட்டியுள்ள பெரியதடாகம், சின்னதடாகம், வரப்பாளையம், சோமையனூர், பாப்பநாயக்கன்பாளையம் பகுதி களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உடமை களுக்கு சேதம் ஏற்படுத்துவது, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் யானைகளால் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு இரவையும் அச்சத்துடனே கழித்து வருகின்றனர். இந்நிலையில், யானைகள் நுழையும்போது ஏற்படும் பயிர் சேதத்துக்கு உரிய காலத்தில் இழப்பீடும் கிடைக்காதது விவசாயிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சின்னதடாகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார் கூறியதாவது:

நேற்று முன்தினம் குட்டி யானை உட்பட 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தென்னை, வாழை மரங்கள் சேதடைந் துள்ளன. சேமடைந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.500-ம், வாழைக்கு ரூ.100-ம் வனத்துறை சார்பில் இழப் பீடாக வழங்கப்படுகிறது. ஆனால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் விவசாயிகள் பலருக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. இது, விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பயிர்கள் சேதமாவதால் விவசாயத்துக்காக செலவிட்ட தொகையைக்கூட திரும்ப பெற முடியவில்லை. எனவே, இழப்பீட்டை விரைந்து வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு பெறும் நடைமுறையையும் எளிமையாக்க வேண்டும். யானை கள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் அல்லது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தாமதம் ஏன்?

இழப்பீடு வழங்குவதில் ஏன் தாம தம் என்பது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது: இழப்பீடு கோரி விவசாயிகள் அளிக் கும் விண்ணப்பங்களை மண்டல தலைமை வனப் பாதுகாவலருக்கு அனுப்பி வருகிறோம். அவரின் ஒப்புதல் பெற்றபிறகு இழப்பீடு அளிக் கப்படுகிறது. முன்பு இழப்பீட்டை வங்கி காசோலையாக அளித்து வந்தோம். தற்போது கருவூலத்தில் இருந்து நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத் தப்படுகிறது. சில விவசாயிகள் வங்கிக் கணக்கை சமர்ப்பிக்க வில்லை, சில விண்ணப்பங்களில் வங்கி விவரங்கள் தவறாக உள்ளன. அவர்களிடம் மீண்டும் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுள்ளோம். அதனால்தான், இழப்பீடு வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள விண்ணப்ப தாரர்களுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close