[X] Close

ஜெயலலிதாவின் ஆன்மா துணை நிற்கும் ஆட்சி இது – அமைச்சர் உதயகுமார் சொல்கிறார்


udhyakumar

ஆர்.பி.உதயகுமார்

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 20:25 pm
  • அ+ அ-

முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இது ஜெயலலிதா ஆன்மாவின் துணையோடு நடக்கிற ஆட்சி. எனவே இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் கலைக்கமுடியாது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

எங்களுடைய எம்.எல்.ஏக்கள் எல்லோரும் அவரவர் தொகுதிப் பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்த 18 எம்.எல்.ஏக்கள் மீது தொகுதி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். அதனால், இப்படியாக ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள்.

முதல்வரை மாற்றவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அருமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆட்சியை யாராலும் எந்த சக்தியாலும் அசைத்துக் கூட பார்க்கமுடியாது.

ஜெயலலிதாவின் ஆன்மா வழிநடத்துகிற ஆட்சி இது. இந்த ஆட்சி தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும். எந்த தீயசக்தியாலும் எதுவும் செய்யமுடியாது.

இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.  

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close