[X] Close

பாஜகவின் ‘வாய்’ தம்பித்துரை! –ஆர்.எஸ்.பாரதி தாக்கு


rsbharathi-thambidurai

ஆர்.எஸ்.பாரதி

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 19:59 pm
  • அ+ அ-

திமுகவும் பாஜகவும் ரகசிய உறவு வைத்துக்கொண்டிருக்கிறது என்று கூறிவரும் தம்பித்துரைக்கு தக்க பாடம் புகட்டுவோம் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாவது:

மாநிலத்தில் ஏதேனும் குட்டையைக் குழப்ப பாஜக நினைக்கிறது. அதற்கு பாஜகவின் வாயாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் துணை சபாநாயகர் தம்பித்துரை. பாஜக என்ன சொல்லுகிறதோ அதை செய்துகொண்டிருப்பார் தம்பித்துரை.

இந்த அதிமுக ஆட்சியில் இருப்பவர்களுக்கு வழக்கு, ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக, இப்படிப்பட்ட பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்.

தம்பித்துரை, உடனடியாக திருத்திக்கொள்ளவேண்டும். அப்படி இல்லையென்றால், தம்பித்துரைக்கு திமுக தக்க பாடத்தைப் புகட்டும்.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close