[X] Close

டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?- மருத்துவர்கள் ஆலோசனை


how-to-prevent-dengue-fever

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Oct, 2018 11:22 am
  • அ+ அ-

கோவையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. அதோடு, கொசுக்களின் உற்பத்தியும் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 3 பேரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு 28 பேரும் ர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்போடு வருபவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை சுகாதாரத் துறை துணை இயக்குநர் (கொள்ளை நோய்கள்) பி.பிரேம்குமார், இணை இயக்குநர் பி.ஜி.பானுமதி ஆகியோர் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.

எப்படி பரவுகிறது?

ஆய்வுக்குப் பிறகு பி.பிரேம்குமார் ‘இந்து தமிழ்’ நிருபரிடம் கூறியதாவது: டெங்கு வைரஸ், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய 'ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், பைப்லைன்கள், சாலை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் உள்ள உபயோகமற்ற பொருட்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டி கள் போன்றவற்றில் தேங்கியி ருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்' கொசுக்கள் முட்டை யிட்டு, கொசுவாக உருவா கிறது. இந்த கொசு டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்து விட்டு மற்றவர்களைக் கடிக்கும் போது ஒருவரிடமிருந்து மற்ற வருக்கு பரவுகிறது. `ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். இந்தக் கொசுக்கள் பகல் நேரங்க ளில் மட்டுமே கடிக்கின்றன.

அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை டெங்குக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி காய்ச்சலைக் குறைப்பதற்காக 'பாரசிட்டமால்' மாத்திரைகளைச் சாப்பிடலாம். போதுமான ஓய்வு எடுத்து, அதிகமான திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதோடு, மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் எலிசா (ELISA) பரிசோதனை முறையில் டெங்குக் காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் 135 மையங்கள் உள்ளன. அதுபோக சுமார் 1,000 ரத்த அணு அளவீட்டுக் கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவி மூலம் 20 முதல் 30 விநாடிகளில் ரத்த அணுக்கள் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய முடியும்.

மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

காய்ச்சல் குறைந்த பின்னரும் கூட நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்சினைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மூன்று நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். குறைவான அளவு சிறுநீர் கழித்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரை, ஆபத்து ஏற்படும் என்ற நிலைமைக்கு முன்னதாகவே அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

மக்களின் பங்கு

பொதுமக்கள் தங்கள் வீட்டில் 'ஏடிஸ்' கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். 
பகல் நேரத்திலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
உதவிக்கு அழைக்கலாம்
டெங்குக் காய்ச்சலைத் தடுக்க நிலவேம்பு கசாயத்தை மக்கள் பருகலாம். கோவை அரசு மருத்துவமனையிலும் டெங்கு பாதிப்பில்லாத மக்களுக்கும் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த புகார்கள், சந்தேகங்கள், கூடுதல் விவரங்களுக்கு 9444340496 என்ற செல்போன் எண்ணிலும், மருத்துவ உதவி சேவை மையத்தை 104 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என பிரேம்குமார் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close