[X] Close

அதிமுக இமயமலை; அமமுக கூழாங்கல்!- உவமை பேசிய அமைச்சர் ஜெயக்குமார்


jaykumar-slams-ttv

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Oct, 2018 11:08 am
  • அ+ அ-

அதிமுக இமயமலை ஆனால் அமமுக வெறும் கூழாங்கல் என உவமை பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். 

சென்னை புரசைவாக்கத்தில் அதிமுகவின் 47-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் பேசும்போது, "லண்டன் ஓட்டல் வழக்கில் கருணாநிதியின் காலில் விழுந்து டிடிவி தினகரன் தன்னை விடுவித்துக் கொண்டார். இது தெரிந்துபோய்தான் அவரை விரட்டியடித்தார் ஜெயலலிதா.

டிடிவி தினகரனுக்கு ஒரு சதவீதம்கூட ஆதரவில்லை. இந்த சூழலில்தான் அவர் அதிமுக - அமமுக இணைக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
அதிமுக இமயமலை; அமமுக கூழாங்கல் இமயமலை எங்குள்ளது கூழாங்கல் எங்குள்ளது" என்றார்.

சமீபத்தில் தினகரன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இன்னும் ஓராண்டுக்குள் அதிமுக தன்னுடைய அமமுக கட்சியோடு இணைக்கப்படும் என கூறியிருந்தார். அந்த கருத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 இதை சுட்டிக்காடியே தினகரனை சாடியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close