[X] Close

சென்னையில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு: டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 13 பேர் மரணம் - நூற்றுக்கணக்கானோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை


two-child-passed-away-because-of-dengue-fever

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 09:11 am
  • அ+ அ-

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு வேக மாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென் னையைச் சேர்ந்த 7 வயது இரட்டை குழந்தைகள் நேற்று உயிரிழந்தன. தாம்பரத்தைச் சேர்ந்த ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் டெங்கு, பன்றிக் காய்ச் சலுக்கு இதுவரை 13 பேர் இறந் துள்ளனர். நூற்றுக்கும் மேற் பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாதவரம் சந்தோஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி கஜலட்சுமி. இவர்களுக்கு 7 வயதில் இரட்டை குழந்தைகளான தக்சன் என்ற மகனும் தீக்சா என்ற மகளும் இருந்தனர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காய்ச்சல் இருந்துள்ளது. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு காய்ச்சல் குறையாததால், 4 நாட்களுக்கு முன்பு இருவரும் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். பரிசோதனையில் இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட குழந்தை களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மருத்துவ மனையில் பரபரப்பு ஏற்பட்டது.

டெங்கு காய்ச்சலால் இரட் டைக் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனை இயக்குநர் அரசர் சீராளர் கூறும்போது, “2 குழந்தைகளும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு பின்னரே மருத்துவ மனைக்கு வந்தனர். இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித் தனர். ஆனால் இருவரும் அபாயக் கட்டத்தில் இருந்ததால் உயிரிழந்துவிட்டனர்” என்றார்.

இந்நிலையில் நேற்று எழும் பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் சுகாதாரத்துறை செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

டெங்கு காய்ச்சலை பொறுத் தவரை பருவமழைக் காலங்களில் அதிகளவில் இருக்கும். குறிப்பாக கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு பன்மடங்கு குறைவாக இருக்கிறது. அக்.1-ம் தேதி முதல் சென்னை மாதவரம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், போரூர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூரில் எல்லை பகுதிகளில் டெங்கு தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இதுமட்டுமின்றி மாநிலத்தின் வேறு பகுதிகளிலும் உள்ளது.

எனவே போர்க்கால அடிப்படை யில், டெங்கு கொசு ஒழிப்பில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகி றோம். கடந்தாண்டு வறட்சி யால் தண்ணீர் தேக்கி வைக்கப் படும்போது அதில் கொசு உருவா னது. இந்தாண்டு கடந்த 15 நாட்களில் மொட்டை மாடியில் உள்ள பழைய பொருட்கள், அருகில் உள்ள கட்டுமான பகுதிகள், காலிமனை களில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றில் தேங்கும் நீரில் கொசு உருவாகிறது.

எனவே, போர்க்கால அடிப்படை யில் கொசு புழுக்கள், முட்டைகளை அழிக்கும் பணி நடந்து வருகிறது. உள்ளூர் குடியிருப்போர் நலச்சங் கங்களையும் இப்பணியில் இணைக்க மாவட்ட ஆட்சியர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வெளியில் சென்று வந்தால் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் பீதி யடைய வேண்டாம். 98 சதவீதம் காய்ச்சல்களை முழுமையாகக் குணப்படுத்த முடியும். பன்றி, எலி, டெங்கு காய்ச்சல் இருந்தால் மட்டுமே சிக்கல் ஏற்படும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 48 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்து விட்டால் முழுமையாக குணப் படுத்த முடியும். பன்றிக் காய்ச்ச லைப் பொறுத்தவரை அதற் கான மருந்தை 48 மணி நேரத் துக்குள் கொடுத்தால் முழுமையாக குணப்படுத்தலாம். மருந்து போது மான அளவு கையிருப்பில் உள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டெங்கு காய்ச்சலுக்கு இது வரை தமிழகத்தில் இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்து 5 பேர் பலியாகியுள்ளதாகவும் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட வர்கள் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்பாக்கம் ரங்க காலனியை சேர்ந்தவர் பிரின்ஸ் உதயசேகரன் (60). இவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

பன்றிக் காய்ச்சலின் பாதிப்பும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் நீடிக்கிறது. இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 39 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி நலவழித்துறை இயக் குநர் ராமன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணியான சுகன்யா பன்றிக் காய்ச்சலால் நேற்று முன்தினம் ஜிப்மர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இதுதொடர்பாக நலவழித்துறை இயக்குநர் ராமனிடம் கேட்டபோது, "புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 5 சதவீதம் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 39 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறி இருப்பதால் அவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளை பன்றிக் காய்ச்சலை உடனடியாக தாக்கும் என்பதால் அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நேற்று தென் மாவட்டங் களைச் சேர்ந்த 6 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர். குமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோன்று திருச்சி, புதுக் கோட்டை, சேலம் மருத்துவமனை களில் சிகிச்சை பெறுவோருக்கு ரத்த பரிசோனை எடுக்கப்பட்டுள் ளது. கோவை மற்றும் திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close