“தற்கொலை செய்து கொள்வோம்... சீமானை சும்மா விட மாட்டாங்க...” நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு பரபரப்பு!


நடிகை விஜயலட்சுமி

’’இது என்னோட கடைசி வீடியோ... நானும் எனது அக்காவும் சாப்பாடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாகப் போகிறோம். அதற்கு நாம் தமிழர் கட்சியினரும் சீமானும் தான் காரணம்’’ என நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சீமான்

சீமான் மீதான புகாரை திரும்பப் பெற்றுவிட்டு, ‘இனி நான் சென்னை பக்கமே வரமாட்டேன்’ என கூறி நடிகை விஜயலட்சுமி பெங்களூர் சென்ற நிலையில், மீண்டும் வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளார். அதில், ‘’இதுதான் என்னுடைய கடைசி வீடியோ. நானும் என்னுடைய அக்காவும் சாப்பிடாமல் சாகப் போகிறோம். எங்கள் சாவுக்கு சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் தான் காரணம்.

மான நஷ்ட வழக்கு போடுகிறோம் என கூறி என்னை டார்ச்சர் செய்கிறார்கள். நான்கு திருமணமாகியுள்ளது என கூறி தமிழக மக்களிடம் என்னை அசிங்கப்படுகிறார்கள். இதையெல்லாம் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 2011 ல் நான் ஏமாற்றப்பட்ட போது புகார் அளித்த போது என் பின்னால் காங்கிரஸ் இருக்கிறது என கூறி எவ்வாறு அவர் மிரட்டினாரோ தற்போதும் அதே நிகழ்வு தான் நடைபெற்று வருகிறது.

இவர்கள் என்னை வாழ விடமாட்டார்கள். அதனால் எங்களது முடிவை நாங்களே எடுத்துக் கொள்கிறோம். எனது அக்காவை தனியாக விட்டு செல்ல விருப்பமில்லை. அதனால் அவளையும் அழைத்து செல்ல இருக்கிறேன். இனிமே எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. கடந்த 12 வருடங்களாக நரக வேதனை அனுபவித்து விட்டேன். தற்போதும் தொடர்ந்து டார்ச்சர் செய்து கொண்டே இருக்கிறார்கள். மான நஷ்ட வழக்கு போடுவேன் என மிரட்டுகிறார்கள்

நான் சாக வேண்டும் என்பதற்காகத்தான் சீமான் இதையெல்லாம் செய்தார். அதுதான் தற்போது நடக்க போகிறது. விடியல் கிடைக்கும் என்று தமிழகம் வந்தேன். எனக்கு அது கிடைக்கவில்லை.. ஆனால் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். இதுதான் எனது கடைசி வீடியோ. காவல்துறை சீமானை கைது செய்து விடுங்கள்’’ என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

x