[X] Close

பதட்டத்துல சொல்லிட்டேன்.. மன்னிச்சுக்கோங்க!- எச்.ராஜா


hraja-apologises-to-madras-high-court

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Oct, 2018 11:31 am
  • அ+ அ-

உயர் நீதிமன்றத்தை சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் விமர்சித்த பாஜக தேசிய செயலாலர் எச்.ராஜா இன்று (திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் நிபந்தனையற்று மன்னிப்பு கோரினார்.

"பதட்டமான சூழலில் சொல்லப்பட்ட வார்த்தைகள். வேண்டுமென்றே கூறவில்லை. நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, புதுக்கோட்டை பகுதியில் விநாயகர் சிலைக்கு ஊர்வல மேடை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது அந்த பகுதிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த எச்.ராஜா "காவல் துறையில் மொத்தமும் ஊழல், காவலர்களின் மனதானது 100 சதவிகிதம் அழுகி போய்விட்டது" எனக்கூறினார்.

அதற்கு காவல் அதிகாரி உயர்நீதிமன்ற அனுமதி இல்லாததால் அவ்வாறு செய்ய முடியாது எனக் குறிப்பிடவே, கடும் கோபமடைந்த எச் ராஜா உயர் நீதிமன்றத்தையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.சி.செல்வம் அமர்வு எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது எச்.ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் செல்வம், நிர்மல்குமார் முன்னிலையில் நேரில் ஆஜரான எச்.ராஜா, "பதட்டமான சூழலில் சொல்லப்பட்ட வார்த்தைகள். வேண்டுமென்றே கூறவில்லை. நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார். இதனையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இந்த சர்ச்சை பூதாகரமானபோது இது என்னோட குரலே இல்லை டப்பிங் குரல் என எச்.ராஜாவும், வெளிநாட்டில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாக எஸ்.வி.சேகரும் பேசியது நினைவுகூரத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close