[X] Close

சிறுவன் உயிரைப் பறித்த கத்திரிக்கோல் விளையாட்டு


child-passed-away

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 11:12 am
  • அ+ அ-

திருப்பூர் பின்னலாடை நிறுவனத் தில் கத்திரிக்கோல் வைத்து அண்ணன் விளையாடிக்கொண் டிருந்த போது, அது திடீரென தம்பி மீது பட்டு உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:

சேலம் மாவட்டம் ஆத்தூர் கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது மகன்கள் மணிசங்கர் (19), பிரவின் (18). சகோதரர்கள் இருவரும் 10-ம் வகுப்பு முடித்தவர்கள். அதன்பின் பள்ளிக்கு செல்லவில்லை. திருப்பூர் கல்லம்பாளையம் நத்தக் காடு ரயில்வேலைன் பகுதியில் தங்கி, அங்குள்ள பின்னலாடை நிறுவனத்தில் கடந்த 4 மாதங் களாக வேலை செய்து வந்தனர்.

நேற்று முன் தினம் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்த கத்திரிக்கோலை கையில் வைத்து விளையாட்டாக சுற்றிக்கொண்டி ருந்தார் மணிசங்கர். அது திடீரென கையில் இருந்து நழுவி, பிரவின் மார்பு பகுதியில் தாக்கியது. இதில் பிரவினுக்கு மார்பில் லேசான காயம் ஏற்பட்டதால், மதியத்துக்கு பிறகு வேலை செய்யாமல் அறை யில் ஓய்வு எடுத்தார். பின் மாலை யில் மார்பு பகுதியில் வலி ஏற்படவே தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு அறைக்கு திரும்பினர்.

அதன்பின் மீண்டும் வலி அதிகமானதால், திருப்பூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் இரவு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக மணிசங்கரை பிடித்து வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close