[X] Close

சபரிமலை விவகாரம்: ரெஹானா பாத்திமா முஸ்லிம் சமூகத்திலிருந்து நீக்கம் - பிரசன்னா வரவேற்பு


prasanna-tweets-about-rehena-fathima

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 10:57 am
  • அ+ அ-

சபரிமலை விவகாரம் தொடர்பாக ரெஹானா பாத்திமா முஸ்லிம் சமூகத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு நடிகர் பிரசன்னா வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. , ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். ஆனால், பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அவர்களைக் கீழே இறக்கக் கேரள அரசு உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா சபரிமலையின் மாண்பையும், இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியதாகக்கூறி முஸ்லிம் சமூகத்தில் இருந்து கேரள முஸ்லிம் ஜமாத் நீக்கி அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கேரள முஸ்லிம் ஜமாத்துக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஆழமான வேதனையும் கண்டன உணர்வும் மேலோங்கி இருக்கும் நிலையில் எங்களுக்கு துணை நின்றதற்காக கேரள முஸ்லிம் ஜமாத்துக்கு நன்றி.

இவ்வாறு நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close