[X] Close

ஐதீகம் வேறு அடக்குமுறை வேறு!- திருமாவுக்கு தமிழிசை விளக்கம்


tamilisai-slams-thirumavalavan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Oct, 2018 10:57 am
  • அ+ அ-

ஐதீகம் என்பது வேறு அடக்குமுறை என்பது வேறு என சபரிமலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக அரசியலாக்கப்பட்டு விட்டது. தீர்ப்பை வைத்து அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டாபோட்டியில் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, "சபரிமலை தீர்ப்பை வரவேற்கிறேன்; ஆனால் ஐதீகம் என்று ஒன்று இருக்கிறது" எனக் கூறினார்.
இதை சுட்டிக்காட்டிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், "100 வருடங்களுக்கு முன்பு - பெண்கள் மார்பக சீலை அணியக்கூடாது என்ற ஐதீகம் இருந்தது. ஐதீகம் என்ற வார்த்தையை சொல்லி மட்டுமே - இன்றும் பெண்களை சபரிமலைக்குள் செல்லக்கூடாது என சொல்பவர்கள் - இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

இந்த ஐதீகத்தை தற்போது பின்பற்ற முடியுமோ?" என வினவியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "ஐதீகம் என்பது வேறு அடக்குமுறை என்பது வேறு. அன்றிருந்தது அடக்குமுறை.  ஐதீகம் அல்ல... 
நாத்திகவாதிகள் ஐதீகத்தை கேள்வி கேட்பது ஏன்? முத்தலாக் ? மசூதிக்குள் பெண்கள் நுழைய தடை.. பற்றி ஏன் பேச மறுப்பு ஏன்? கன்னியாஸ்திரிகள் மானபங்கப்பட்டதை கண்டிக்க மனம் இல்லை ஏன்? அதெல்லாம் பெண்ணுரிமை இல்லையா?"
என வினவியுள்ளார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close