தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது... எனது அரசியல் ஆக்ரோஷமாக தானிருக்கும்... அண்ணாமலை பேட்டி!


அண்ணாமலை

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றும் மோடியை பிரதமராக்குவோம் என அதிமுகவினர் கூறலாம், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என நான் எப்படி கூற முடியும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்சினைகள் இருக்கும் என்பது சகஜம்தான். அடிப்படையில் கொள்கை ரீதியாக கட்சிகளுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன. அதிமுக எதிர்க்கிறார்கள் என்பதற்காக நாங்கள் இறங்கி போக முடியாது. அதிமுகவில் சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சினை இருக்கலாம். நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை.

என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது. எனது அரசியல் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும். தமிழக பாஜகவுக்கும் சரி எனக்கும் சரி அதிமுகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை. அதே வேளையில் மத்தியில் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்றும் தமிழகத்தில் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமியை ஆக்குவோம் என செல்லூர் ராஜு அண்ணன் சொல்கிறார். இதை நான் எப்படி சொல்ல முடியும்

அண்ணாமலை

மத்தியில் பிரதமர் சரி, மாநிலத்தில் எடப்பாடியை முதல்வராக்குவோம் என நான் சொல்ல முடியாது. இதை தேசிய தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என கூறி பதவிக்கு வந்த நான், எடப்பாடி முதல்வராவார் என எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தன்னுடயை முக்கிய நோக்கமே நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் என்பதுதான். இதை யார் எல்லாம் ஒப்புக் கொள்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி, இதை அதிமுக ஒப்புக் கொண்டுள்ளது’’ என அண்ணாமலை கூறினார்.

x