[X] Close

தினகரன் ஜாதகத்துடன் சுற்றுகிறார் – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு


ops-dinakaran

ஓபிஎஸ் - டிடிவி தினகரன்

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 18:47 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

எப்படியாவது அதிமுகவையும் இரட்டை இலையையும் கைப்பற்றுவேன் என்று டிடிவி.தினகரன் அவருடைய ஜாதகத்தை கையில்வைத்துக்கொண்டு ஜோஸியர்களைப் பார்க்க ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறார். இது ஒருபோதும் நடக்காது என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக எனும் பேரியக்கத்தை ஒரு குடும்பம் தன் பிடிக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. அதனால்தான் தர்மயுத்தத்தைத் தொடங்கினோம்.

அந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்று ஆட்சி நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் எங்கிருந்தோ வந்த தினகரன், ஒரு இரண்டுமூன்று மாதம் கூட பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.

அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்பேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார். கனவு காண்கிறார். அதிமுகவையும் இரட்டை இலையையும் எந்தக் கொம்பனாலும் எதுவும் செய்யமுடியாது.

ஆனால் தினகரன் எப்படியாவது சால்ஜாப்பு வித்தைகளை செய்து, கைப்பற்றுவேன் என்று கையில் அவருடைய ஜாதகத்தை வைத்துக்கொண்டு, ஜோஸியர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close