[X] Close

மீ டூ விவகாரம்: வீண் சர்ச்சையாக்காதீங்க! பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்


metoo-premalatha-vijayakanth

பிரேமலதா விஜயகாந்த்

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 18:15 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

மீ டூ விவகாரத்தில் பெண்கள் தேவையில்லாத சர்ச்சையாக்காதீர்கள். ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும். எனவே உறுதியாகவும் தெளிவாகவும் இருங்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீ டூ விவகாரம் குறித்து தெரிவித்ததாவது:

பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். அலுவலகத்தில் பாதுகாப்பு இல்லை எனும் நிலையைச் சொல்லுகிறார்கள். பாலியல் கொடுமை நடப்பதாகப் பேசுகிறார்கள்.

ஒருவிஷயத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நம் வாழ்க்கை நம் கையில். நாம் உறுதியாக இருந்தால், நாம் பலருக்கு உதாரணமாக இருந்தால், நம்மை மீறி நமக்கு ஒரு தவறு நடக்க வாய்ப்பே இல்லை. வாய்ப்புகள் மிகக்குறைவு என்றுதான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு துறையிலும் பெண்கள் பலவகைகளில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு கிடைத்த மீடூ எனும் விஷயம் ஹேஷ்டேக், பிரபலமாகியிருக்கிறது. இதைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.

இதைக் கொண்டு சர்ச்சைக்கு உரியதாக ஆக்காதீர்கள். விவாதப் பொருளாக்காதீர்கள்.

பெண்களையும் சகோதரிகளாகப் பாருங்கள். நண்பர்களாகப் பாருங்கள் என்று ஆண்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு உதாரணம் சொல்லுவார்கள். ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையமுடியும் என்பார்கள். பெண்கள் உறுதியாக இருந்தால்தான் எல்லாமே இங்கு சாத்தியமாகும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.


 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close