[X] Close

கமலை கிண்டல் செய்து எஸ்.வி.சேகர் ட்விட்!


kamal-svsekar

கமல் - எஸ்.வி.சேகர்

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 17:49 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கமலை கிண்டல் செய்து நடிகர் எஸ்.வி.சேகர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சபரிமலை விவகாரத்தில், என்னிடம் இதைக் கேட்பது பொருத்தமில்லாதது. நான் இதுவரை சபரிமலைக்குச் சென்றதில்லை. இதை பக்தர்களிடம்தான் கேட்கவேண்டும் என்று கமல் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.

இதையடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர். கமலைக் கிண்டல் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,  

ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாளை இரண்டாம் குலோத்துங்க சோழன் பெயர்த்தெடுத்தபோது ஆவேசமாக எதிர்த்த “ராமானுஜதாஸன்” (தசாவதாரம்) படைத்தவன்,நடித்தவன்,என்ற உணர்வுடன் சொல்லியிருந்தால் சரியான கருத்து வந்திருக்கும். இப்படி மழுப்பத்தேவையிருக்காது.

முல்லைப்பெரியார் பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லையே அது நினைவுக்கு வரவில்லையா? பல நூற்றுக்கணக்கான உணர்வுகளை உள் வாங்கி திரையில் பிரதிபலித்த கலைஞனின் சமாளிபிகேஷன் என கமலை கேலி செய்து, நக்கலாக விமர்சித்துள்ளார் எஸ்.வி.சேகர்.
 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close