[X] Close

சபரிமலை விவகாரம்: சாருஹாசன் சர்ச்சைக் கருத்து


charuhasan-comments-about-sabarimala

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 11:35 am
  • அ+ அ-

சபரிமலை விவகாரம் தொடர்பாக கமலின் அண்ணனும், நடிகருமான சாருஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும்கூட அங்கு பெண்கள் செல்ல முடியாத அளவுக்கு ஐயப்ப பக்தர்களும், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.சபரிமலையில் நடை திறக்கப்பட்டவுடன் அங்குச் சில பெண்கள் சென்றனர். அங்குள்ள பக்தர்கள் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரும்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

தற்போது இந்தியளவில் சபரிமலை விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக கமலின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் சர்ச்சைக்குரிய கருத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

…ஒரு தவறான சமத்துவம்………….

சபரிமலைக்கு செல்வதில் கேட்கப்படும் சமத்துவம்…… பெண்கள் ஆண்களின் பொதுக் கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது., ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை? அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம்…!!!

இவ்வாறு சாருஹாசன் தெரிவித்திருக்கிறார்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close