இன்று திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி! 3,000 பேர் தேர்வு!


மதுரையில் திமுக மூத்த நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருக்கு அமைச்சர் உதயநிதி பொற்கிழி வழங்கும் விழா 3 இடங்களில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

திமுக வடக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் மேலுாரில் இன்று ஆயிரம் நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்குகிறார். இன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் அருகே மஸ்தான்பட்டியில் கலைஞர் கருணாநிதி உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர் விரகனுார் அருகே கலைஞர் கருணாநிதி திடலில் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். நாளை காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார்.

பின்னர் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டியில் மதியம் 12 மணிக்கு ஆயிரம் நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.

நாளை மாலை 4 மணிக்கு மதுரைக் கல்லுாரி மைதானத்தில் நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தலைமையில் ஆயிரம் மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்குகிறார்.

x