கொடைக்கானலில் படகு போட்டி


கோப்புப் படம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடைவிழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கனமழை காரணமாக கடந்த 21-ம் தேதி நடைபெறவிருந்த படகுப் போட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழக படகு குழாம் சார்பில் நட்சத்திர ஏரியில் நேற்று நடைபெற்றது.

ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என 3 பிரிவுகளில் நடைபெற்ற மிதிபடகு போட்டியில், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராம் போட்டியைத் தொடங்கிவைத்தார்.நகராட்சி ஆணையர் சத்தியநாதன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் காயத்ரி,சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன், உதவி அலுவலர் சுதாகலந்துகொண்டனர்.

போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 10 நாட்கள் நடைபெற்ற மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்றுடன் (மே 26) நிறைவடைகிறது.