[X] Close

தவறவிட்ட ரூ. 50 ஆயிரத்தை திரும்ப பெற்ற தம்பதி: ரோந்துப் பணி காவலர்கள் கண்டெடுத்து ஒப்படைத்தனர் 


super-gesture-by-police

காவல் துறையினரிடம் இருந்து மணி பர்ஸை பெற்றுக் கொள்ளும் தம்பதி.

  • kamadenu
  • Posted: 20 Oct, 2018 11:02 am
  • அ+ அ-

கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று விருத்தாசலம் காவல் நிலைய தலைமைக் காவலர் திருமேனி மற்றும் காவலர் திருமுருகன் ஆகியோர் விருத்தாச்சலம் பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது கீழே ஒரு மணிபர்ஸ் கிடந்ததை கண்டெடுத்தனர். அதில் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது.

மேலும், பர்ஸில் ஒரு அடையாள அட்டையும், அதில் செல்போன் எண்ணும் இருந்துள்ளது. இதையடுத்து மணிபர்ஸை, விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியனிடம் ஒப்படைத்தனர்.

கண்டெடுக்கப்பட்ட பர்ஸில் இருந்த செல்போன் எண்ணை தொடர்புக் கொண்டு, அவர்களை வரவழைத்து,மணிபர்ஸில் உள்ள விபரங்களை கேட்டறிந்த பின், பர்ஸை தவறவிட்ட கீதா மற்றும் அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். காவல் துறை யினரின் நேர்மையைப் பாராட்டிய தம்பதி, மாவட்டக் காவல் துறைக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். குறிப்பிட்ட காவலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் பாராட்டினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close