9 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி! பாணதீர்த்த அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!


பாணதீர்த்த அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள்!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாபநாசத்திற்கு மேல் அமைந்துள்ளது பாணதீர்த்த அருவி. இந்த அருவிக்கு செல்வதற்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

பாணதீர்த்த அருவிக்கு செல்லும் நுழைவு வாயில்

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாபநாசத்திற்கு மேல் அமைந்துள்ளது பாணதீர்த்த அருவி. பாபநாசம் அணையை கடந்து அமைந்துள்ள இந்த அருவியை பார்க்க சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் குவிந்த வண்ணம் இருந்தனர். அருவியை அருகில் இருந்து பார்ப்பதற்காக படகு சவாரி அமைக்கப்பட்டிருந்தது. இந்த படகில் சென்று சுற்றுலாப் பயணிகள் அருவியை பார்த்து ரசித்து வந்தனர்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி அருவியைப் பார்க்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் வேதனை அடைந்தனர்.

பாணதீர்த்த அருவி

இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் பாணதீர்த்த அருவியை பார்வையிட நேற்று முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த அருவியை காரில் சென்று பார்க்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் செலுத்தி பார்வையிடலாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, அருவியைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். அதே நேரத்தில் அருகில் சென்று அருவியை பார்க்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை என்று சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டினர்.

x