[X] Close

முதல்வர் ராசியால்தான் தமிழகத்தில் நல்ல மழை!- பெருமை பேசிய அமைச்சர் 


minister-hails-cm

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Oct, 2018 10:43 am
  • அ+ அ-

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராசியால்தான் தமிழகத்தில் நல்ல மழை பெய்து ஏரி, குளங்கள் எல்லாம் நிரம்பி மக்கள் மகிழ்ச்சியாக விவசாயம் செய்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருக்கிறார்.

ஈரோட்டில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "அம்மாவின் அரசை சீராக நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவோடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவோடும் இன்று தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மழை பெய்து ஏரி, குளங்கள் எல்லாம் நிரம்பியிருக்கின்றன.

வாய்க்கால்கள் எல்லாம் திறக்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சியாக விவசாயம் செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால் இன்று தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளது" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close