அதிர்ச்சி... பிரதமர் மோடி அருகிலேயே மயங்கி விழுந்தார் பாஜக எம்.பி.,


பிரதமர் மோடியுடன் குரூப் போட்டாே

பிரதமருடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டிருந்த போது பாஜக எம்பி ஒருவர் திடீரென பிரதமர் அருகிலேயே மயங்கி விழுந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு உருவானது.

பிரதமர் மோடியுடன் குரூப் போட்டாே

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று பழைய கட்டிடத்தில் விவாதம் நடைபெற்றது. இன்று முதல் புது கட்டிடத்தில் கூட்டம் நடைபெற இருக்கிறது. மதியம் ஒரு மணியளவில் புதிய கட்டிடத்தில் இரு அவைகளும் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் காலை 10 மணியளவில் பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகம் வந்தார். இரு அவைகளின் உறுப்பினர்களும் நாடாளுமன்றம் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

பிரதமர் மோடியுடன் குரூப் போட்டாே

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்பி கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்ட 750 எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து குழுவாகும், தனித்தனியாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது திடீரென்று பாஜக எம்பி நர்ஹரி அமீன் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அங்கிருந்த எம்பிக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிரதமருடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டிருந்த போது பாஜக எம்பி திடீரென மயங்கி விழுந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

x