[X] Close

இவர் ஏன் இப்படி கூச்சலிடுகிறார்?- வைகோவை சாடிய எச்.ராஜா


hraja-slams-vaiko

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 12:29 pm
  • அ+ அ-

மீனவர் பிரச்சினையில் பாஜகவை சாடிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விமர்சித்திருக்கிறார் எச்.ராஜா.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இவர் ஆதரிக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் 600 மீனவர்கள் கொல்லப்பட்டனர். பாஜக ஆட்சியில்  ஒரே ஒரு சம்பவம்தான். மேலும் 5 மீனவர்களை தூக்கு தண்டனையிலிருந்து காத்ததும் பாஜக ஆட்சி. இவர் ஏன் இப்படி கூச்சலிடுகிறார். இனியும் இவர் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, தமிழக மீனவர்களின் பாரம்பர்ய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்போக்குடன் மத்திய பா.ஜ.க அரசு நடந்துகொள்கிறது. இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள்மீது இலங்கை அரசால் போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறச்செய்து, விடுதலை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க அரசு, தமிழக மீனவர்களை இந்தியர்களாகக் கருதவில்லையா? எனப் பேசியிருந்தார்.

இதற்கு ட்வீட் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் எச்.ராஜா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close