[X] Close

கமலுக்கு அரசியல் அனுபவம் போதாது ; துரைமுருகன் கருத்து


kamal-duraimurugan

துரைமுருகன்

  • kamadenu
  • Posted: 18 Oct, 2018 21:27 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கமலுக்கு அரசியல் அனுபவம் போதாது. திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் அவசியம் ஏற்பட்டால், கூட்டணி வைப்பேன் என்றும் திமுகவில் இருந்து காங்கிரஸ் கூட்டணி உடைந்து, காங்கிரஸ் வெளியே வரும் என்றும் கமல் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து தெரிவித்ததாவது:

கமல் எனக்கு நல்ல நண்பர். எனக்குப் பிடித்த நடிகரும் கமல்தான். அவரைப் போல் நடிப்பதற்கு எவருமே இல்லை. ஆனால் அரசியலில் அவருக்கு போதிய அனுபவமில்லை என்பது என் கருத்து.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்தச் சலசலப்புக்கும் இடமில்லை. காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில்தான் இருக்கிறது. திமுக கூட்டணியில்தான் இருக்கும்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close