[X] Close

நான் மைக்டைசன் குமார் – ஜெயக்குமார் சொல்கிறார்


mikdison-jeyakumar

அமைச்சர் ஜெயக்குமார்

  • kamadenu
  • Posted: 18 Oct, 2018 20:50 pm
  • அ+ அ-

என்னை மைக் குமார் என்று டிடிவி.தினகரன் கிண்டல் செய்திருக்கிறார். நான் மைக் குமார் அல்ல. மைக் டைசன் குமார். அடித்தால் நாக் அவுட்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், அமைச்சர் ஜெயக்குமாரை மைக் குமார் என்று சொன்னார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

என்னை மைக் குமார் என்று டிடிவி.தினகரன் சொல்லியிருக்கிறார். இப்போது நான் சொல்லிக்கொள்கிறேன். நான் மைக் குமார் அல்ல. மைக் டைசன் குமார். அடித்தால் நாக் அவுட்டுதான்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close