[X] Close

மோடி ஆதரவு மீம்ஸ்; எதிர்ப்பு மீம்ஸ் ரெண்டுமே பிஜேபிதான்! – திருமாவளவன் குற்றச்சாட்டு


sabarimalai-thiruma

தொல்.திருமாவளவன்

  • kamadenu
  • Posted: 18 Oct, 2018 20:31 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

மோடிக்கு ஆதரவு தெரிவித்து மீம்ஸ் போடுபவர்களும் பிஜேபியினர்தான். மோடியை எதிர்த்து மீம்ஸ் போடுபவர்களும் பிஜேபிதான். இது ஆர்.எஸ்.எஸ்.ன் உத்திகளில் ஒன்று என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சபரிமலைக்குச் செல்லும் பெண்களை தடுத்து நிறுத்தி, அவர்களைத் தாக்குவதற்கு முற்பட்ட சம்பவம் குறித்து திருமாவளவனிடம் கேட்டனர் செய்தியாளர்கள்.

அதற்கு அவர் பதிலளித்ததாவது:

மோடிக்கு ஆதரவு தெரிவித்து மீம்ஸ் போடுபவர்களும் பிஜேபியினர்தான். அதேபோல், மோடியை எதிர்த்து மீம்ஸ் போடுபவர்களும் பிஜேபியினர்தான். இது ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் உத்திகளில் ஒன்று. அவர் பிரதமராவதற்கு முன்பு இப்படி மீம்ஸ்கள் போட்டுத்தான் மோடியை மிகப்பெரிய ஹீரோவாக்கினார்கள். 

இந்த உத்தியைத்தான் இப்போது ஆர்.எஸ்.எஸ். கேரளாவில் செய்துவருகிறது. அங்கே ஆட்சி நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தவும் பின்னடைவை உண்டாக்கவும் கேரளாவில் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அல்லது விளையாடுகிறார்கள்.

சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்துகின்றனர். மேலும் அவர்களை திரும்பிப் போகச் சொல்லி தாக்குதல் நடத்தவும் முனைகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் செயல்கள் கண்டிக்கத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close