[X] Close

பணத்துக்கும் மிரட்டலுக்கும் பயந்தார் கமல்! – எச்.ராஜா ஆவேசம்


kamal-hraja

எச்.ராஜா

  • kamadenu
  • Posted: 18 Oct, 2018 20:12 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பணத்துக்காகவும் மிரட்டலுக்காகவும் பயந்து பணிந்தவர் கமல். பாஜக பற்றி அவர் பேசவே கூடாது என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜகவைப் பற்றி கமல், கொல்லைப்புறத்தில் நுழைகிறது என்கிறார். இவர் மட்டும் என்னவாம்? எந்தப் பக்கமாக வந்திருக்கிறார்? நான் பாஜக ஆரம்பித்த நாளில் இருந்து இருக்கிறேன். அவர் வயசு இருக்கும் வரை, சினிமாவில் நடித்தார். சம்பாதித்தார். இப்போது மக்களை ஏமாற்ற அரசியலுக்கு வந்துவிட்டார்.

பணத்துக்காகவும் மிரட்டலுக்காகவும் பயந்து பணிந்தவர் கமல். வெட்கக்கேடான விஷயம். பணத்துக்காக, மிரட்டலுக்காக பயந்து, நாட்டை விட்டே போகிறேன் என்றவர்தான்,இன்றைக்கு நாட்டைத் திருத்துகிறேன், நாட்டுக்காகப் பாடுபடுகிறேன் என்றெல்லாம் சொல்லுகிறார்.

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close