சிவகங்கையில் 30 வருட வரலாற்றை மாற்றிக் காட்டுவேன்... சிவகங்கையில் பாஜக வேட்பாளர் சூளுரை!


நிர்வாகிகள் கூட்டத்தில் தேவநாதன் யாதவ்

சிவகங்கையில் ப.சிதம்பரம் குடும்பத்தை வீழ்த்தி 30 வருட வரலாற்றை மாற்றிக் காட்டுவேன் என பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் சூளுரைத்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக ப.சிதம்பரம் குடும்பத்தினரே அதிகமுறை வெற்றி பெற்றுள்ளனர். 1984 முதல் ப.சிதம்பரம் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பியாக உள்ளார். இந்த முறை அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் மற்றும் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்ப்புகளை மீறி மேலிட செல்வாக்கால் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்த்து அங்கு பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார். 300 கோடிக்கு மேல் சொத்துக்கு அதிபதியான இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவருக்கு கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து களம் இறங்கும் வாய்ப்பை பாஜக வழங்கி உள்ளது.

தேவநாதன் யாதவ்

தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு இருக்கும் அதிருப்தியை தனக்கான ஆதரவாக மாற்றும் வேலைகளில் தேவநாதன் யாதவ் இறங்கியுள்ளார். முன்னாள் எம்பி சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டவர்களை சந்தித்து இவர் ஆதரவு கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆண்டு கால வரலாற்றை மாற்றிக் காட்டுவேன் என தேவநாதன் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு காலமாக இங்கு தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ப.சிதம்பரம் குடும்பத்தை வீழ்த்தி நான் வெற்றி பெறுவதன் மூலம் வரலாற்றை மாற்றிக் காட்டுவேன் என சூளுரைத்துள்ளார்.

x