கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை மீது காட்டத்தை காட்டி, தமிழர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடாதீர்கள் என மத்திய பாஜக அரசுக்கு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை கடந்த 1974-ல் இலங்கைக்கு தாரைவார்த்ததால், தமிழக மீனவர்கள் நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று வரை மீனவர் பிரச்சினை தொடர்வதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக தான் காரணம் எனவும் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ், திமுக பதிலளிக்க வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது:
’கச்சத்தீவு பிரச்சினையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியள்ளது. அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி. அன்று வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர். அந்த 27-1-2015-ம் நாள் கடிதத்தைப் பற்றி கேட்டால், பாஜக தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்?
கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பாஜக தலைவர்களுக்கு இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றி கவலையில்லை போலத் தெரிகிறது. உங்கள் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள்’
இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!
முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!
‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்
காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?