[X] Close

இது பாலின சமத்துவ பிரச்சினையில்லை; பின்னணியை விசாரிக்க வேண்டும்!- சபரிமலை விவகாரத்தில் எச்.ராஜா கருத்து


hraja-tweet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Oct, 2018 13:46 pm
  • அ+ அ-

சபரிமலை செல்ல முற்படுபவர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்ற அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதனை, எதிர்த்து தமிழகம் மற்றும் கேரளாவில் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கேரளாவில் பாஜக பிரம்மாண்ட பேரணி நடத்தியது.

இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (அக்.17) நடை திறக்கப்பட்டுள்ள சூழலில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றமே அனுமதித்துவிட்டதால் எதிர்ப்பையும் மீறி பல பெண்கள் சபரிமலை செல்ல முற்படுகின்றனர். அவர்களை தடுக்கும் அமைப்புகளும் ஆங்காங்கே இருக்கின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் இது குறித்து எச்.ராஜா தனது ட்விட்டரில், "இது பால் சமநிலை பிரச்சினை இல்லை. ஐயப்ப சுவாமி மீது பக்தி உள்ள தாய்மார்கள் நாங்கள் காத்திருக்க தயார் என்று தெளிவாக போராடிவரும் நிலையில் கோவிலுக்கு செல்ல முற்படுபவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close