[X] Close

130 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டறியப்பட்ட ‘நீலகிரி பிளைன் ஹேஸ்’ வண்ணத்துப்பூச்சி


butterflies-at-nilgiris

நீலகிரி பிளைன் ஹேஸ் வகை வண்ணத்துப்பூச்சி.

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 12:52 pm
  • அ+ அ-

 

ஆர்.டி.சிவசங்கர்

130 ஆண்டுகளுக்கு பின்னர், நீலகிரி பிளைன் ஹேஸ் என்ற வகை வண்ணத்துப்பூச்சி மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 30 ஆண்டு களுக்குப் பின்னர் வண்ணத்துப் பூச்சி கணக்கெடுப்பு நடத்தப்பட் டது. இப்பணியில் நீலகிரி மாவட்ட வனத்துறை மற்றும் Wynter-Blyth Association(WBA) என்ற தனியார் அமைப்பின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழு வதும், அனைத்து பகுதிகளையும் 15 குழுவினர் தணிக்கை செய்தனர்.

குஞ்சப்பனை பகுதியில் அதிகபட்சமாக 97 வகைகளும், கோத்தகிரி பனக்குடி சோலையில் 75 வகைகளும் கண்டறியப்பட்டன. இக்கணக்கெடுப்பில் 130 ஆண்டு களுக்கு பின்னர், நீலகிரி பிளைன் ஹேஸ் (Nilgiri Plain Ace) வகை வண்ணத்துப்பூச்சி கண்டறியப்பட் டுள்ளது. இதற்கு முன்னர், 1888-ம் ஆண்டு இந்த வகை வண்ணத்துப் பூச்சி குறித்து குறிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா மாநிலம் திருவாங்கூர் இயற்கை வரலாற்று சங்கத்தைச் சேர்ந்த கலேஷ் சதா சிவம், இந்த வகை வண்ணத்துப் பூச்சியை கண்டறிந்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘வண்ணத் துப்பூச்சிகள், அவை உள்ள பகுதி யின் சுற்றுச்சூழல் தன்மையை உணர்த்தும் உயிரினங்கள். பார்சன்ஸ்வேலி பகுதியிலுள்ள வனத்தில் 14 வகை வண்ணப்பூச்சி கள் காணப்பட்ட நிலையில், கெத் தையில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பகுதியில் 60 முதல் 70 வகைகள் கண்டறியப்பட்டன. இதன்மூலமாக, அப்பகுதியிலுள்ள சூழலின் தன்மை விளங்குகிறது’ என்றார்.

இக்கணக்கெடுப்பில், நீலகிரி பிளைன் ஹேஸ் வகை உட்பட 198 வகை வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டன.

இதுதொடர்பாக கணக்கெடுப் பில் ஈடுபட்ட டபிள்யூ.பி.ஏ. ஒருங் கிணைப்பாளர் மனோஜ் சேது மாதவன் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்தில் 301 வகை வண்ணத் துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள் ளன. முதன்முறையாக Pale Green Awlet, The Extra lascar மற்றும் Many Tailed Oad Blue ஆகிய மூன்று புதிய வகை வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டன. 18 வகை வண் ணத்துப்பூச்சிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகள் குறித்த புத்தகம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட வன அலுவலர் சுமேஷ் மோகன் தெரிவித்துள்ளார். இதேபோல், பறவைகள் மற்றும் பிற உயிரின கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட உள்ளது' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close