[X] Close

டிச.12-ல் ரஜினி கட்சி அறிவிப்பா?- திருச்சி கூட்டத்துக்கு 10 லட்சம் பேர் திரட்டப்படுகிறார்களா?


rajinikanth-may-launch-political-party-on-december-12

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Oct, 2018 10:25 am
  • அ+ அ-

கடந்த 2017-ம் ஆண்டின் கடைசி பிரேக்கிங் நியூஸ் ரஜினி நான் அரசியலுக்கு வருகிறேன். கட்சி ஆரம்பிப்பேன். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறியதுதான்.

ஆனால், அதற்குப் பின் ரஜினி அரசியல் பெயர் அளவிலேயே இருக்கிறது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்ததோடு கிராம சபை கூட்டங்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகள், அன்றாடம் அரசியல் விமர்சனங்கள் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துவிட்டார்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 12-ம் தேதி ரஜினிகாந்த் அவரது அரசியல் கட்சியை அறிவிக்கலாம் என பேச்சுகள் அடிபடுகின்றன். ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்தநாளுக்கு முன் இப்படிப்பட்ட பேச்சுக்கள் என இதை கடந்த போய் விட முடியாதபடி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களே இதைத் தெரிவிக்கின்றனர். கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பின் தான் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை.

என்றாலும்கூட 10 லட்சம் பேரை திருச்சியில் திட்டமிடப்பட்டுள்ள அரசியல் கட்சி அறிமுக விழாவுக்கு திரட்டுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை மாவட்ட செயலாளர் ஒருவர் கூறும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து மாவட்டச் செயலாளர்களால் எத்தனை பேரை எத்தனை வாகனத்தில் அழைத்துவர முடியும் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

ஆனால், மக்களும் ஏன் அவரது ரசிகர்களும்கூட ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவதால் அவர் அரசியல் குறித்து என்ன கொள்கை வைத்திருக்கிறார் என்ற குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்.
 அதேபோல் கட்சிக் கொள்கை குறித்து இதுவரை எந்த ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடக்கவில்லை என வேதனைப்படுகிறார் இன்னொரு மாவட்டச் செயலாளர்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து சில முக்கியப் புள்ளிகள் நீக்கப்பட்டதும். சிலர் ஓரங்கட்டப்பட்டதும் கூட ரஜினி மன்றத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

ரஜினி மக்கள் மன்ற செயற்பாட்டாளர் ஒருவர் கூறும்போது, "நாங்கள் அனைவரும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். ரஜினி மக்கள் மன்றத்தில் நாங்கள் இணையும்போது இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு ரஜினி தொடங்கும் கட்சி ஒரு மாற்றாக அமையும் என்றே எண்ணினோம். ஆனால், இப்போது ஏமாற்றத்தில் இருக்கிறோம். ரஜினிகாந்த், பிரச்சினைகள் சீர் செய்ய முடியாத அளவுக்கு செல்வதற்கு முன்னதாக எல்லாவற்றையும் தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close