பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என்று சொன்ன டிடிவி தினகரன் எங்கே? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி


ஆர்.பி.உதயகுமார்

"நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்குற பாஜக கூட கூட்டணி வைக்கிறது தற்கொலைக்கு சமம்னு சொன்ன டிடிவி தினகரன், தற்போது எங்கே போனார்" என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி- அமித் ஷா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் விமர்சனம் எழுந்தது. இதில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. இதில் அதிமுக ஆட்சியை இழந்தாலும், பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். அதன் பிறகு பாஜக, அதிமுக தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதலால், இந்த கூட்டணி உடைந்தது. தற்போது மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், பாஜகவோடு அதிமுக கூட்டணியில் இருந்த காலக்கட்டத்தில் கடுமையாக விமர்சித்தவர் டிடிவி தினகரன். நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்குற பாஜக உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர் கூறியிருந்தார். இந்த மக்களவைத் தொகுதியில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் டிடிவி தினகரன். அந்த கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேனி தொகுதியில் டிடிவி தினகரனும், திருச்சியில் செந்தில்நாதனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பாஜக உடன் கூட்டணி வைத்தால் அதிமுக தற்கொலைக்கு செய்வதற்கு என்று கூறிய டிடிவி தினகரன் எங்கே இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிடிவி தினகரன்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது கடுமையாக விமர்சித்தவர் டிடிவி தினகரன். தற்போது எம்பி பதவிக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். நோட்டோவுக்கு கீழே இருக்கும் பாஜக உடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என்று கூறிய டிடிவி தினகரன், இப்போது எங்கே போனார்?. வீரமுள்ள தன்மானமுள்ள அந்த டிடிவி தினகரன் எங்கே இருக்கிறார்?. அந்த தன்மானமுள்ள டிடிவி தினகரனை தமிழ்நாடு மக்கள் தேடுகிறார்கள். தன்னுடைய அடையாளம், முகவரி, செல்வாக்கு இழந்த அவர், வாழ்வளித்த இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து எம்.பி பதவிக்காக தேனியில் போட்டியிடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x