காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் கெடுபிடி தரக்கூடாது: வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!


வருமான வரித்துறை

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வருமான வரியாக 1,700 கோடி ரூபாய்க்கும் மேல் செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் இது காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என அக்கட்சி கடுமையாக விமர்சித்து இருந்தது.

காங்கிரஸ் கட்சி

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வருமானவரித்துறை நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பி.வி.நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு கண்டிப்புடன் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூ.1,700 கோடி ரூபாயை வசூல் செய்வதற்கான நடவடிக்கையை தற்போது எடுக்க மாட்டோம் என உறுதி அளித்தார். மேலும் வழக்கை தேர்தல் காலம் முடிந்த பிறகு ஜூன் மாதத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று இந்த வழக்கை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

x