[X] Close

ஜெயலலலிதா இணைத்து வைக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ் கைகுலுக்கல்!


ops-eps-jayalalitha

  • kamadenu
  • Posted: 16 Oct, 2018 14:57 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

அதிமுகவில் இலக்கிய அணி சார்பில், சென்னை முழுவதும் பிரமாண்டமான போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இந்தப் போஸ்டர் எல்லோரையும் கவனிக்க வைத்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அவர்களின் கைப்பிடித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டுபேரையும் கைகுலுக்க வைப்பது போல், ஒரு புகைப்படம்.

நீங்கள் கண்ட கனவுகளையெல்லாம் நாங்கள் நிறைவேற்றுவோம் அம்மா என்றொரு வாசகமும் பளிச்சிடுகிறது.

சமீபகாலமாக, இபிஎஸ் - ஓபிஎஸ் நட்பில் விரிசல் என்பதாகவே பேச்சு அடிபட்டு வருகிறது. ஓபிஎஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் அதனால் அவர் வருத்தத்தில் இருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

’கடந்த வருடம் ஓபிஎஸ் என்னை சந்தித்தார்’ என்று டிடிவி.தினகரன் கொளுத்திப் போட்டார். அது இன்னும் பற்றிக்கொண்டது. அமைச்சர்கள் ஆளாளுக்கு பார்த்தார், பார்க்கவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். கடைசியாக, ‘ஆமாம், சந்தித்தேன்’ என்று ஓபிஎஸ் சொன்னார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் இணைந்ததும் அவருக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டது. அப்போதைய பதவியேற்பு விழா நிகழ்வின் போது, அப்போது இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியின் கையையும் ஓபிஎஸ்சின் கையையும் இணைத்து வைத்து, கைகுலுக்கச் செய்தார்.

இப்போது இந்த இரண்டையும் நினைவுபடுத்தி, ப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்க்கிறார்கள் மக்கள்.

  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close