[X] Close

அறிவாலயத்தில் கலைஞருக்கு சிலை; சோனியா காந்தி, யெச்சூரிக்கு அழைப்பு


kalaingar-statue

கலைஞர் கருணாநிதி

  • வி.ராம்ஜி
  • Posted: 15 Oct, 2018 17:18 pm
  • அ+ அ-

அண்ணா அறிவாலயத்தில் கலைஞருக்கு சிலை நிறுவி, வரும் நவம்பர் 15ம் தேதி திறக்கவுள்ளதாக டிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து, அவருக்கு கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞருக்கு சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக டிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

கலைஞரின் சிலை நவம்பர் 15ம் தேதி திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சீதாரம் யெச்சூரி, மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு டிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close