[X] Close

மீண்டும் விஜய்யை மறைமுகமாக சாடிய தமிழிசை சவுந்தரராஜன்


tamilisai-condemns-again-vijay-speech-at-sarkar-audio-launch

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 17:13 pm
  • அ+ அ-

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மீண்டும் விஜய்யை மறைமுகமாக சாடியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில், விஜய்யின் பேச்சு தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக அமைச்சர்கள், பாஜகவினர் என கடுமையாக விஜய்யை சாடினார்கள்.

இந்நிலையில், இன்று (அக்.15) சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழிசை கூறியதாவது:

வாழ்நாளில் முக்கால்வாசி பகுதியை மக்களைப் பற்றி கவலையே படாமல் தனது காஜானாவை நிரம்புவதையே கொள்கையாக கொண்ட ஒருவர், அந்த நேரத்தில் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் இன்று அரசியலுக்கு வந்து, அரசியல்வாதிகளை விமர்சனம் செய்கிறார் என்பதைப் பார்க்கும் போது சிரிப்பதா என்ன செய்வதென்று தெரியவில்லை. 

ஏனென்றால் அவர் ஏதோ மாயபிம்பம், மனக்கணக்கில் இருக்கிறார். அரசியலை சினிமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எல்லாம் தமிழ்நாட்டில் பிரச்சினையே இல்லையா. 

படத்துக்கே 'சர்கார்' என்ற தலைப்பை வைத்துள்ளவர்களுக்கே நல்லது செய்ய ஆர்வம் உள்ளபோது சர்காரை வைத்துள்ள நாங்கள் எவ்வளவு நல்லது செய்வோம். அதனால் அவர் வரட்டும் வந்தப்பிறகு அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்கிறேன். 

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close